நாமக்கல் நரசிம்ம சுவாமி திருக்கோவிலில் 70 வயது பூர்த்தியடைந்த தம்பதிகளுக்கு சிறப்பு திட்டம்!
70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளை கௌரவித்து சிறப்பு செய்யப்படும். இதில் கலந்து கொள்ள விரும்பும் தம்பதிகள் அல்லது அவர்களைப் பற்றி அறிந்தவர்கள், ஆஞ்சநேயர் கோவில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்;
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதுதாக ஆஞ்சநேயர் கோயில் செயல் அலுவலர் இளையராஜா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது...இந்து சமய அறநிலையத் துறை சார்பில், நாமக்கல் அருள்மிகு நரசிம்ம சுவாமி கோவிலில், 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுத்த உள்ளது.இந்த திட்டத்தின் கீழ், 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளை கௌரவித்து சிறப்பு செய்யப்படும். இதில் கலந்து கொள்ள விரும்பும் தம்பதிகள் அல்லது அவர்களைப் பற்றி அறிந்தவர்கள், ஆஞ்சநேயர் கோவில் அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.இதற்கான தகுதிகளாக, தம்பதியர்கள் இருவரும் 70 வயது பூர்த்தியடைந்தவர்களாகவும், இந்து மதத்தைச் சார்ந்தவர்களாகவும், வருட வருமானம் ரூ.3,00,000/-க்கும் குறைவாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு நாமக்கல் அருள்மிகு நரசிம்ம சுவாமி கோவில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.