புதுக்கோட்டையில் தனியார் பள்ளியில் மருத்துவ முகாம்
புதுக்கோட்டையில் மருத்துவ முகாம் பிரபல மருத்துவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது;
புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி 9 A நத்தம் பண்ணை மாநகரப் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமூக மாற்றத்தின் விதை அறக்கட்டளை குழுவினர் மற்றும் திருச்சி SRM மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து புனித அந்தோணியார் டெல்லி பப்ளிக் பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 15க்கும் மேற்பட்ட பிரபல மருத்துவர்கள் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களின் எண்ணிக்கை 125 ஆகும். இதில் திருச்சி SRM மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குயில் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 19 ஆகும். இந்த முகாமில் SRM மருத்துவத் துறையினரோடு , சமூக மாற்றத்தின் விதை அறக்கட்டளை குழுவின் நிறுவனர் திருமதி.தீபாபிரபு , ஆலோசகர் பாரதி நகர் ராஜா , தலைவர் அருண்குமார் , துணைத் தலைவர் திருமதி. நித்யா , பொருளாளர் மதிவாணன் , தசெல்வராஜ் திருமதி. ராசாத்தி , திருமதி. யோகா.திருமதி. சசிரேகா முகமது கனி , திரு. பாலு திரு.சார்லஸ் , SRM மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முகாம் இயக்குனர் திருமதி.பூங்கோதை , மற்றும் மருத்துவத் துறையின் முகாம் ஒருங்கிணைப்பாளர் சாதாம் உசேன் , புனித அந்தோனியார் டெல்லி பப்ளிக் பள்ளி இயக்குனர் மற்றும் ஆசிரிய பெருமக்களும், மற்றும் ஏராளமான ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.