கரூரில் அதிமுக புதிய கட்சி அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கரூரில் அதிமுக புதிய கட்சி அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.;
கரூரில் அதிமுக புதிய கட்சி அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கரூரை அடுத்த ராயனூர் பகுதியில் இன்று அதிமுக கரூர் மாநகர தெற்கு பகுதி சார்பில் புதிய கட்சி அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட செயலாளருமான எம். ஆர்.விஜயபாஸ்கர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மாநகர தெற்கு பகுதி செயலாளர் ரவி தலைமையில் பட்டாசுகள் வெடித்து, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் கரூர் சட்டமன்ற தொகுதி அளவிலான நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். அலுவலகத்தின் வாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் திரு உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஆசியுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைய செய்ய வேண்டும். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சொன்னது போல 210 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியுடன் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கு அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டுமென கட்சியினருக்கு கோரிக்கை விடுத்தார்.