கரூர் அருகே சின்ன வடுகபட்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா- ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பரவச தரிசனம்.
கரூர் அருகே சின்ன வடுகபட்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா- ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பரவச தரிசனம்.;
கரூர் அருகே சின்ன வடுகபட்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா- ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பரவச தரிசனம். கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், சின்ன வடுகப்பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழா வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆலயம் அருகில் பிரத்தியேகமாக யாக குண்டங்கள் அமைத்து மூன்று கால யாக வேள்வி பூஜைகள் மற்றும் பூர்ணாவதி ஹோமம் நிறைவு பெற்றதுடன் யாகசாலை கலசத்திற்கு தூப தீபம் காண்பிக்கப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க சிவாச்சாரியார் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசத்தினை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்த பிறகு கோபுர கலசத்தை வந்தடைந்த உடன் அஷ்டபந்த மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து கலசத்திற்கு பட்டாடை உடுத்தி, சந்தன பொட்டிட்டு, தூபதீபம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் விநாயகருக்கு புனித தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து பரவச தரிசனம் செய்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் விழா கமிட்டியின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.