
குமரி மாவட்டம் வெள்ளிசந்தை அடுத்த வேம்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகப்பெருமாள் மகன் கண்ணன் (42). டியூஷன் ஆசிரியர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கனகசபாபதி என்பவருக்கும் வழிப்பாதை சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஆறுமுக பெருமாள் தனது மகன் கண்ணன் வீட்டுக்கு வந்துவிட்டு திரும்பி தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது கனகசபாபதி அவரை தகாத வார்த்தையில் பேசியுள்ளார். இதை கண்ணன் தட்டி கேட்டுள்ளார். அப்போது அங்கு நின்ற கனக சபாபதியின் மனைவி பரணிகாதேவி கண்ணனை செருப்பால் அடித்து அவமானப்படுத்தியதாக தெரிகிறது. மேலும் இருவரும் சேர்ந்து கண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இது குறித்து கண்ணன் வெள்ளி சந்தை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பரணிகா தேவி (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கனகசபாபதியை தேடி வருகின்றனர்.