
குமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள அரசு பள்ளியில் நேற்று நூற்றாண்டு விழா நடந்தது. தேசியக்கொடி ஏற்றுதல் நிகழ்ச்சியும், நூற்றாண்டு விழா ஒளிச்சுடர் ஏற்றுதல் மற்றும் உறுதிமொழி ஏற்றல் நிகழ்ச்சியும் தொடர்ந்து நூற்றாண்டு விழா பலூன் பறக்க விடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனா நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட எஸ் பி ஸ்டாலின், முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி ஆகியோர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து பள்ளி முன்னோடி மாணவர்களின் எழுச்சி உரையும் இடையிடையே தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரிய பெருமக்களை கௌரவித்த நிகழ்ச்சியும், பள்ளியில் பயின்று 80 வயது கடந்த முன்னாள் மூத்த மாணவர்களை கௌரவித்தலும், பள்ளிக்கூடம் அமைவதற்கு இடம் வழங்கிய குடும்பத்தினரை கௌரவித்தல் நிகழ்ச்சியும், பள்ளியில் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை கௌரவித்த நிகழ்ச்சியும் நடைபெற்றது.