![தேசிய சாலைப் பாதுகாப்பு வார நிகழ்ச்சி : கலெக்டர் பங்கேற்பு தேசிய சாலைப் பாதுகாப்பு வார நிகழ்ச்சி : கலெக்டர் பங்கேற்பு](https://king24x7.com/h-upload/2025/01/28/785443-136339_1738048455038_1738049602842_1738049960626_1738050369217_1738050443335_1738050761906_1738051376475_1738051387845_1738051397584_1738051397692_1738051557696_1738051632469_1738051962089_1738052529371_1738060328118_1738060346663_1738142211319_1738166433017_1738177149524_1738186919540_1738270957231_1738430803073_1739462687853_1739719086854.webp)
தேசிய சாலைப்பாதுகாப்பு வார விழாவையொட்டி ஜனவரி 1 முதல் 31.01.2025 வரை சாலைப்பாதுகாப்பு வார விழா குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக மாவட்ட வட்டார போக்குவரத்து கழகம் (நாகர்கோவில்) கழகம் சார்பில் வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா கலந்துகொண்டு, பரிசுகள் வழங்கினார். அவர் பேசுகையில்:- பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் சாலைகளில் சாகசம் செய்வதை சமூக வலைதளங்களில் பகிர்வதால் மற்ற இளைஞர்களும் இதுபோன்ற சாகசகங்களில் ஈடுபடுகின்றனர். எனவே அதிகப்படியான உயிர்பலி ஏற்படுகின்றன. எனவே பொதுமக்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், சமூதாயத்தில் தங்களது பொறுப்பினை அறிந்து சாலைவிதிகளை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதன் மூலம் உயிரை மற்றும் விபத்துக்களை தவிர்க்கலாம். அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து விபத்துக்களை தவிர்க்கும் வகையில் வாகனம் ஓட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். என பேசினார். முன்னதாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவருக்கும் சாலைப்பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் கலெக்டர் வழங்கினார். நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில்; வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, மற்றும் இருசக்கர வானக ஓட்டிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.