
கன்னியாகுமரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொட்டாரம் தெற்கு தெரு, பிள்ளையார் கோவில் பகுதியில் சென்பகம் என்பவர் வீடு உள்ளது. வீட்டின் முன்பு இரவில் நிறுத்திய மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் நேற்று நள்ளிரவு தீ வைத்து எரித்துள்ளனர். இதில் பைக் முழுவதுமாக எரிந்து நசமானது. மேலும் அருகாமையில் நின்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் இருக்கையையும் கத்தியால் கிழித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.