
குமரி மாவட்டம் திக்கணங்கோடு ஜங்ஷனில் தனியாரால் புதிதாக போர்வெல் கிணறு இன்று அமைக்கப்பட்டது. போர்வெல்லில் இருந்து மண், சகதி மற்றும் கழிவு நீரை சாலை முழுவதும் கொட்டியதால் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் , வாகன ஓட்டிகள் இப்பகுதியில் கடைகள் வைத்துள்ள வியாபாரிகள், அவதியடைந்தனர். குறிப்பாக கால் மற்றும் துணிகளில் சகதி பட்டதால் மக்கள் தொல்லையடைந்தனர். இப்பகுதியில் 7 மணி நேரத்திற்கு மேலாக இப்பகுதியில் பொதுமக்கள் , வாகன ஓட்டிகள் சாலையில் நடமாட முடியாமல் அவதிப்பட்டனர். எனவே சாலை முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக போர்வெல் சகதி மற்றும் கழிவு நீரை கொட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய கட்டிட உரிமையாளர் மீது சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்தனர்.