
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை,பாளை தொகுதி, பகுதி, ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் மேலப்பாளையத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கனி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாபெரும் வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.