பர்கூர் அருகே ஐந்து மாத பெண் குழந்தை திடீர் உயிரிழப்பு.
பர்கூர் அருகே ஐந்து மாத பெண் குழந்தை திடீர் உயிரிழப்பு.;

கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூரை அடுத்த ஜெகினிகொல்லையை சேர்ந்தவர் மலைவா சன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பேபி (30) இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் மேலும் 2 வது ஜெயஸ்ரீ என்கிற 5 மாத பெண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் இந்த குழந்தைக்கு திடீரென என்று உடல் நிலை பாதிப்படைந்ததுள்ளது. இதனால் பெற்றோர் குழந்தை ஜெயஸ்ரீயை பர்கூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.