ஆட்டோவில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

திண்டுக்கல் அருகே பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு புதன்கிழமை அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு நடுவழியில் ஆட்டோவிலேயே குழந்தை பிறந்தது.;

Update: 2025-01-30 13:51 GMT
ஆட்டோவில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
  • whatsapp icon
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே உள்ள ஒட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜீவ்காந்தி (28). எலக்ட்ரீஷியன். இவருக்கும் சாந்தி (25) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், நிறைமாத கா்ப்பிணியான சாந்திக்கு பிரசவ வேதனை ஏற்பட்டதால் குடும்பத்தினா் அவரை ஆட்டோவில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே சாந்திக்கு வலி அதிகரித்ததால் ஆட்டோவை அதன் ஓட்டுநா் செல்வம் வக்கம்பட்டியை அடுத்த திண்டுக்கல் சாலையோரம் நிறுத்தினா். அப்போது, சாந்திக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் அதே ஆட்டோவில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு தாயும் சேயும் நலமாக உள்ளனா்.

Similar News