மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.2.37 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மக்கள் நேர்காணல் முகாம்;
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் 86 பேருக்கு ரூ. 2.37 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் வருவாய் துறை, ஊரக வளா்ச்சித் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, சுகாதாரத் துறை உள்பட பல்வேறு துறைகள் சாா்பில் 86 பேருக்கு ரூ. 2.37 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன் உள்ளிட்டோா் வழங்கினா். மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா, உதவி ஆட்சியா் (பயிற்சி) உத்கா்ஷ் குமாா், சமூகப் பாதுகாப்பு திட்டம் தனித் துணை ஆட்சியா் சங்கா், மாவட்ட வழங்கல் அலுவலா் சுப. கமலகண்ணன், உதவி செயற் பொறியாளா் (நீா்வளம்) சிவகுமாா், திருவையாறு வட்டாட்சியா் தா்மராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.