பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் நகராட்சி வளாகத்தில் உள்ள இடங்களை பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தாமல் தனியாருக்கு தாரை வார்க்கின்ற வகையில் கட்டிடங்களை கட்டி ஆட்டோ நிறுத்தம்,இரவு நேர டிபன் கடைகளை அப்புறப்படுத்துவதை கைவிட வேண்டும்;
சிஐடியு அனைத்து வகையான வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் சங்கம் சார்பில் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம். பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு - அனைத்து வகையான வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர் சங்கம் சார்பில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரெங்கநாதன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் அகஸ்டின், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ,சிபிஎம் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் பெரியசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை எடுத்துரைத்து பேசினர். இதில் மக்கள் நலனை புறக்கணித்துவிட்டு தனியார் நலனுக்காக அரசு இடங்களை வணிக நோக்கத்துடன் தனியாருக்கு தாரை வார்க்கும் பெரம்பலூர் நகராட்சி சீர்கேடுகளை களைந்திட வலியுறுத்தியும், பெரம்பலூர் நகராட்சி வளாகத்தில் உள்ள இடங்களை பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தாமல் தனியாருக்கு தாரை வார்க்கின்ற வகையில் கட்டிடங்களை கட்டி ஆட்டோ நிறுத்தம்,இரவு நேர டிபன் கடைகளை அப்புறப்படுத்துவதை கைவிட வேண்டும் என தெரிவித்து சங்க நிர்வாகிகள் உட்பட சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.