காணாமல் போன சிறுவன் பத்திரமாக மீட்பு!
குடியாத்தம் அருகே காணாமல் போன சிறுவனை போலீசார் பத்திரமாக மீட்டனர்.;

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செட்டிகுப்பம் பகுதியில் சிறுவன் காணாமல் போனான். பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர் ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை. இன்று ஜனவரி 30 அதிகாலை ராபின்சன் குளம் அருகே நடைப்பயிற்சியின் போது சிறுவனை அங்கு கண்டறிந்தனர். பின்னர் அவனை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.