தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாளான ஜன.30 வியாழனன்று, மகாத்மா காந்தி சிலைக்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், பட்டுக்கோட்டை கிளை சார்பில் பொருளாளர் பக்கிரிசாமி, எம்.ஆர்.செந்தில்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில், தமுஎகச மாவட்ட துணைத் தலைவர் தி.தனபால், செயற்குழு உறுப்பினர் மணிமாறன், வினோத், கிருபாகரன், கிளைத் தலைவர் முருக.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
