சேலத்தில் மயானங்களில் வேலை செய்யும் 125 தொழிலாளர்களுக்கு நல உதவிகள்
சமபந்தி விருந்தும் வழங்கப்பட்டது
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மயானங்களில் இரவு, பகல் பாராமல் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களின் பொது சேவையை பாராட்டி கவுரவிக்கும் வகையில் சமபந்தி விருந்து மற்றும் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில், கோவை ஏசுவின் சமாதானம் டிரஸ்டின் தலைவர் ஏ.எஸ்.வி.ராபின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மயானத்தில் தன்னலம் பாராமல் பொது நலத்துடன் வேலை செய்து வரும் 125 தொழிலாளர்களுக்கு தலா 5 கிலோ வீதம் அரிசி மற்றும் பல்வேறு நல உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் அனைவருக்கும் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. முடிவில், அவர்களின் சேவையை பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை சேலத்தை சேர்ந்த நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின், சேலம் ஜம்ஜம் ஹெல்மெட் உரிமையாளர் காசிம் ஆகியோர் செய்திருந்தனர்.