சேலம் அருகே வீராணம் ஏரி பகுதியில் சிலர் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக வீராணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்குள்ள ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, மறைவான இடத்தில் இருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் அல்லிக்குட்டை கங்காபுதூரை சேர்ந்த சிங்காரம் என்ற கண்ணன் (வயது 32), வீராணத்தை சேர்ந்த சிவா (25) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.12 ஆயிரத்து 500 மதிப்புள்ள 1¼ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.