மத்தூர்: பிளஸ்-2 மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது- போலீசார் விசாரணை.
மத்தூர்: பிளஸ்-2 மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது- போலீசார் விசாரணை.
கிருஷ்ணகிரி மவட்டம் மத்தூர் அருகே 17 வயது சிறுமி பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வரும் நிலையில் கடந்த 23-ஆம் தேதி அன்று மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் மகளை போச்சம்பள்ளியில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது மாணவி கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதை அடுத்து மாணவி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் கர்ப்பத் திற்கு காரணம் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.