முள்ளிப்பாடியில் ரூ 20 லட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்கூடத்தை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி திறந்து வைத்தார்.

முள்ளிப்பாடியில் ரூ 20 லட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்கூடத்தை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி திறந்து வைத்தார்.

Update: 2024-08-26 04:49 GMT
முள்ளிப்பாடியில் ரூ 20 லட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்கூடத்தை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி திறந்து வைத்தார். கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, முள்ளிப்பாடி ஊராட்சியில் உள்ள முள்ளிப்பாடி பகுதியில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி இன்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து, குத்து விளக்கு ஏற்றி வைத்து சமுதாயக்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சியில் கடவூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சுதாகர், முள்ளிப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் நீலா வேல்முருகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள், திமுக கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய சமுதாய கூட திறப்பு விழாவை சிறப்பித்தனர். புதிய சமுதாயக்கூடத்தை திறந்து வைத்த எம் எல் ஏ சிவகாமசுந்தரிக்கு திமுக கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொன்னாடை மற்றும் சால்வைகள் அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

Similar News