திருவாரூரில் நடைபெற்ற காவிரி இலக்கிய திருவிழா 2024
பள்ளி கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்கம் இணைந்து திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற காவிரி இலக்கிய திருவிழாவில் மாணவ-மாணவியர் பங்கேற்பு.
திருவாரூர் மாவட்டம், காட்டூர் கலைஞர் கோட்டத்தில், மாவட்ட நிருவாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் காவிரி இலக்கிய திருவிழா (2024)வினை பொது நூலக இயக்குனர் பொ.சங்கர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தனர். இதன் முதல் நிகழ்வாக காவிரி இலக்கிய திருவிழாவானது பல இலக்கிய ஆளுமைகளை தன்னகத்தே கொண்ட திருவாரூரில் இன்று (20.12.2024) மற்றும் நாளை (21.12.2024) ஆகிய இரு நாட்களும் நடைபெறுகிறது.