குமரி:  4 வழி சாலையோரம் கொட்டப்படும் கேரள கோழி கழிவுகள்

கொல்லங்கோடு;

Update: 2025-01-30 05:15 GMT
குமரி:  4 வழி சாலையோரம் கொட்டப்படும் கேரள கோழி கழிவுகள்
  • whatsapp icon
குமரி மாவட்டத்திற்குள் கேரள கழிவுகள் கொண்டு வருவதை தடுக்க எல்லை பகுதியில் உள்ள சோதனை சாவடிகளுக்கு மாவட்ட காவல் நிர்வாகம் உத்தரவிட்டது. தற்போது கேரளா கழிவுகள் தமிழக பதிவுகள் வருவது வெகுவாக குறைந்துவிட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு வேளையில் இந்த கழிவு வாகனங்கள் செங்கவிளை பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் பகுதி வழியாக குமரி மாவட்டம் அடைக்கா குழி பகுதியில் உள்ள 4 வழி சாலையில் கோழி கழிவுகளை கொட்டி விட்டு சென்று விடுகிறார்கள்.        இது குறித்த புகாரின் பேரில் அடைக்கா குழி ஊராட்சி நிர்வாகம் சார்பில் அந்த பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் அனுமதி பெற்று கேரளா கழிவுகளை பள்ளம் தோண்டி புதைத்து விடுகின்றனர்.  இதை அறிந்த விஷமிகள் தொடர்ந்து இரவு நேரங்களில் வாகனங்களில் கேரளா கழிவுகளை கொட்டி சென்று விடுகிறது.       ஆகவே இரவுகளில் அடக்கக்கூடிய பகுதியில் கழிவுகளை கொட்டும் சமூக விரோதிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அடைக்கா குழி ஊராட்சி தனி அலுவலர் அஜிதா கொல்லங்கோடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் சம்பவம் சென்று விசாரணை நடத்தினர்.

Similar News