ஓசூர்: லாரி உரிமையாளர் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு.

ஓசூர்: லாரி உரிமையாளர் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு.

Update: 2025-01-22 00:26 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் குமுதேப்பள்ளி திப்பாளம் சாலையை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (37). லாரி உரிமையாளர். இவர் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊரான அகரம் கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்ற அவர் 19-ந் தேதி வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு இருப்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார் அப்போது பீரோ வைத்திருந்த 9 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து மஞ்சுநாதன், அட்கோ காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சென்று பீரோ, ஜன்னல் உள்ளிட்ட இடங்களில் கைரேகைகளை சேகரித்து இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News