கிராம நிர்வாக அலுவலரை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற கல் கடத்தும் கும்பல்

கிராம நிர்வாக அலுவலரை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற கல் கடத்தும் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-12-24 16:13 GMT

சேலம் மாவட்டம் எடப்பாடி கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட சமுத்திரம் கிராமத்தில் நேற்று இரவு 9.30 மணி அளவில் அனுமதின்றி வெள்ள கற்களை லாரி டிராக்டர் மூலம் கள்ளத்தனமாக கடத்தி செல்வதாக எடப்பாடி வட்டாட்சியர்க்கு புகார் வந்துள்ளனர்.

இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், இருவருக்கும் எடப்பாடி வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட வாகனத்தை சிறைபிடிக்க உத்தரவிட்டு உள்ளதை அடுத்து  காளியம்மன் கோவில் மூலக்கடை அருகே வாகனத்தை சிறைபிடிக்கும் போது கிராம நிர்வாக அலுவலர் குமாரை பலமாக தாக்கிவிட்டு செல்போனை பறித்துக் கொண்டு மர்மகும்பல் தப்பி ஓடிவிட்டனர்.

மேலும் படுகாயம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் குமாரை சிகிச்சைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தள்ளார் தொடர்ந்து இது தொடர்பாக கொங்கணாபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.7

Tags:    

Similar News