காந்திகிராமத்தில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார் ஆட்சியர்.

காந்திகிராமத்தில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார் ஆட்சியர்.

Update: 2024-11-15 09:42 GMT
காந்திகிராமத்தில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார் ஆட்சியர். தமிழக முதலமைச்சர் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் "ஊட்டச்சத்தை உறுதி செய்" இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கரூர் வடக்கு காந்தி கிராமம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கவாடி மையத்தில் காணொளி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் இதே திட்டத்தை துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கலந்து கொண்டு தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். இதில் ஊட்டச்சத்து மிகுந்த பேரிச்சம்பழம், தேன், காய்கறிகள், கீரை வகைகள், தானிய வகைகள், சத்துமாவு உள்ளிட்ட பல்வேறு வகையான ஊட்டச்சத்துடன் கூடிய பொருட்கள் வழங்கப்பட்டது. ரூ.22 கோடி மதிப்பீட்டில் இரண்டாவது கட்டமாக தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், கரூர் மாவட்டத்திலும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1297 குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் இன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Similar News