மேல ஒரத்தையில் பாம்பு கடித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

மேல ஒரத்தையில் பாம்பு கடித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

Update: 2024-11-15 11:10 GMT
மேல ஒரத்தையில் பாம்பு கடித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. ஈரோடு மாவட்டம், கொடுமுடி, சின்னியம்பாளையம், அர்ஜுன காலனி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் ஸ்ரீ சக்தி வயது 20. இவர் நவம்பர் 7ஆம் தேதி இரவு 8 மணி அளவில், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல ஒரத்தை பகுதியில் உள்ள மதுரை வீரன் கோவிலுக்கு வந்துள்ளார். அன்று இரவு 8 மணி அளவில் திடீரென அவருக்கு இயற்கை அழைப்பு ஏற்பட்டதால், அருகில் உள்ள ஒதுக்கு புறமான பகுதிக்கு சென்றுள்ளார். இருளாக இருந்த அந்த பகுதியில் வந்த பாம்பு ஒன்று ஸ்ரீ சக்தியை கடித்து உள்ளது. உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு, மேல் சிகிச்சைக்காக நவம்பர் 8-ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி நவம்பர் 13 ஆம் தேதி இரவு 10 மணியளவில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீ சக்தியின் தாயார் சுமதி வயது 45 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த ஸ்ரீ சக்தியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Similar News