கங்கைகொண்டானில் ஆற்றில் மிதந்த ஆண் சடலம்
கங்கைகொண்டானில் ஆற்றில் மிதந்த ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-17 11:13 GMT
மீட்கப்பட்ட சடலம்
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் தீயணைப்பு நிலையத்துக்கு உட்பட்ட சிற்றாறு பகுதியில் ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக இன்று (ஜூன் 17) காலை தகவல் பெறப்பட்டு மீட்பு படையினர் அங்கு சென்று ஆண் சடலத்தை மீட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர் மதுரையைச் சேர்ந்த பாலாஜி (32) என்பது தெரிய வந்தது. இவர் எதற்காக இங்கு வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.