ரூ.5,000 லஞ்சம் வாங்கிய உதவியாளர் கைது

நிலம் வரன்முறைப்பட்ட ரூ. 5,000 லஞ்சம் வாங்கியதாக கூறி திருவள்ளூர் ஊராட்சி உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-13 04:03 GMT

நிலம் வரன்முறைப்பட்ட ரூ. 5,000 லஞ்சம் வாங்கியதாக கூறி திருவள்ளூர் ஊராட்சி உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். 

வெள்ளவேடு அடுத்த நேமம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில்குமார். இவர், திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் கிராமத்தில், 1,200 சதுர அடியில் வீட்டுமனை வாங்கி உள்ளார். அதை ஊராட்சியில் வரன்முறைபடுத்த, பூண்டி ஒன்றிய அலுவலகத்தில் மனு செய்திருந்தார். அலுவலக உதவியாளர் விஜயகுமார் என்பவர், '5,000 ரூபாய் கொடுத்தால், நிலத்தை வரன்முறைபடுத்த முடியும்' என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுனில்குமார், திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

இதைத் தொடர்ந்து, ரசாயனம் தடவிய 5,000 ரூபாயை, விஜயகுமாரிடம் கொடுக்குமாறு லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியுள்ளனர். நேற்று மதியம் சுனில்குமார் ரசாயனம் தடவிய பணத்தை விஜயகுமாரிடம் கொடுத்தார். பணத்தை வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டி.எஸ்.பி., ராமச்சந்திரமூர்த்தி தலைமையிலான போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News