இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2024-01-09 08:13 GMT

மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 

அரியலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரியலூர் திருச்சி சாலையிலுள்ள தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் தண்டபாணி தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பேரிடர் கால நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு கோரிய நிதியினை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தபட்டது. மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ராமநாதன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News