தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை திமுகவினர் இன்று (நவம்பர் 27) வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மீட்பு மற்றும் அவசர சிகிச்சை மையத்தில் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.