10-ஆண்டுகள் பணிபுரிந்த தினக்கூலி & ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தி வேலை நிறுத்தம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் கைது. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சிஐடியு சார்பில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் பத்தாண்டுகள் பணிபுரிந்த தின கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் வேலை நிறுத்தம் செய்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் சிஐடியு மாவட்ட துணை தலைவர் ஜீவானந்தம் மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் கரூர் மாநகராட்சி கவுன்சிலர் தண்டபாணி சிஐடியு மாவட்ட பொருளாளர் சாந்தி உள்ளிட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் பத்தாண்டுகளுக்கு மேல் பணி செய்து வரும் தொழிலாளர்களை பணி நிரந்தர செய்திட வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு பெற்றுள்ள தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி அமைப்புகள் திருத்த சட்டம் 2022 மற்றும் அதன் விதிகள் 2023 திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். உயர் கல்வியில் துப்புரவு பொறியியல் துறையை உருவாக்கிட வேண்டும். தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை கால போனஸ் 8.33 சதவீதம் சட்டப்படி வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்பு வீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்து தனியா தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.