ராமநாதபுரம் மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு

திருவாடானை அருகே மாநில நெடுஞ்சாலையில் 10 நாட்களுக்கு மேலாக மழை நீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு;

Update: 2025-12-08 07:59 GMT
ராமநாதபுரம்மாவட்டம்திருவாடானையிலிருந்து ஓரியூர் -க்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த மாநில நெடுஞ்சாலையில் புலியூர், வெள்ளையபுரம்,. ஓரியூர் குடியிருப்பு பகுதி என பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதோடு மேடு பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த மழைநீர் கடந்து பத்து நாட்களைக் கடந்தும் தண்ணீர் அகற்றப்படாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மழை நீர் தேங்கி இருப்பதால் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. விரைந்து மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.

Similar News