கரூரில் இ ஃபைலிங் முறைக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்திய பிறகு அமல்படுத்த வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பு செய்து 6-வது நாளாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
கரூரில் இ ஃபைலிங் முறைக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்திய பிறகு அமல்படுத்த வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பு செய்து 6-வது நாளாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.;
கரூரில் இ ஃபைலிங் முறைக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்திய பிறகு அமல்படுத்த வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பு செய்து 6-வது நாளாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் தற்போது நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் தங்களது மனுக்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் ஆன்லைனில் மனுக்களை பதிவு செய்வதற்கான கட்டமைப்புகளை முறையாக அமுல்படுத்தவில்லை. இதனால் மனுக்களை பதிவேற்றம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் வழக்கறிஞர்கள் தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ள இயலாமல் சிரமத்தில் உள்ளனர். இது தொடர்பாக பலமுறை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிபதிகளுக்கு கோரிக்கை விடுத்தும் அதற்கான கட்டமைப்புகளை உருவாக்காததால் கட்டமைப்புகளை முறையாக உருவாக்க வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் செயல்படும் ஒவ்வொரு நீதிமன்றங்கள் முன்பு வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து இன்று ஆறாவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் அடிப்படையில் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் நகுல்சாமி தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட இருபால் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களிடம் தெரிவித்த சங்கத்தின் செயலாளர் நகுல்சாமி, இ பைலிங் செய்யும் நடைமுறையில் நாங்கள் நீதிமன்றத்திற்கு எதிராக போராடவில்லை. அதேசமயம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதில் உள்ள கட்டமைப்புகளை மேம்படுத்தி அதன் பிறகு செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையிலேயே இந்த நீதிமன்ற புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் எனவும், நீதிபதிகள் வழக்கறிஞர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டும் வழக்காடிகளின் நலனை கருத்தில் கொண்டும் நீதிமன்றத்தின் கால நேரத்தை விரயம் செய்யாமலும் தொடர்ந்து வழக்குகளை விரைவாக நடத்துவதில் எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் இ ஃபைலிங் முறையில் உள்ள கட்டமைப்புகளை மேம்படுத்திய பிறகே இ ஃபைலிங் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.