ராமநாதபுரம் பொதுமக்கள் சாலை மறியல்

திருவாடானை அருகே கிராமத்திற்குள் கண்மாய் உபரி நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறி சாலை மறியல்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால்  போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது;

Update: 2025-12-08 07:53 GMT
ராமநாதபுரம் மாவட்டம் திருவாரனை அருகே வில்லாரேந்தல் கிராமம் உள்ளது. இந்த கிராம மக்கள் விவசாயத்தை நம்பி வசித்து வரும் நிலையில் பொதுப்பணித்துறையின் கீழ் பராமரிப்பில் உள்ள ஓரியூர் கண்ணாயிலிருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. அது வில்லாரேந்தல் கிராம பகுதியில் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது மேலும் நூற்றுக்கு மேற்பட்ட விவசாய நிலங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் விவசாய முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் முதற்கொண்டு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமற்ற கிராம மக்கள் வெள்ளையபுரம் - ஓரியூர் செல்லும் சாலையை மறைத்து மறியல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. SP பட்டினம் காவல் நிலையத்தார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய்த்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்

Similar News