பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கமிட்டி சார்பாக எடப்பாடியில் ஆர்ப்பாட்டம்
பாராளுமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்த மத்திய பாஜக அரசை கண்டித்து எடப்பாடியில் சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Update: 2023-12-23 11:34 GMT
பாராளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்த மத்திய பாஜக அரசை கண்டித்து சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழகத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவரும். முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி.தங்கபாலு தலைமையில் எடப்பாடி பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது காமராஜர் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் திருவருவ சிலைகளுக்கு மாலை அணிவித்தும் காங்கிரஸ் கட்சியின் கொடியையும் முன்னாள் அமைச்சர் கே.வி. தங்கபாலு ஏற்றி வைத்து சிறப்பித்தார். தொடர்ந்து மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசை எதிர்த்து கேள்வி கேட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சஸ்பெண்ட் செய்து வருவதை வன்மையாக கண்டிப்பதாகவும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் கே.வி..தங்கபாலு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்று காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும் எனவும், மத்திய அரசு தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் செய்வது குறித்து விமர்சனம் செய்து மக்கள் பணியில் காங்கிரஸ் எப்போதும் சிறப்பாக செயல்படும் என்றும் பேட்டி அளித்தார். அப்போது மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், எடப்பாடி நகர காங்கிரஸ் தலைவர் நாகராஜ் உட்பட காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் பலரும் உடன் இருந்தனர்.