பிப்., 4 ல் கொ.ம.தே.க எழுச்சி மாநாடு - ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ தகவல்

விஜயமங்கலம் டோல்கேட் அருகே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் எழுச்சி மாநாடு பிப்.,4 ஆம் தேதி நடைபெற உள்ளது என ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ தகவல் .

Update: 2024-01-01 09:24 GMT

ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் டோல்கேட் அருகே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் எழுச்சி மாநாடு வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் டோல்கேட் அருகே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் எழுச்சி மாநாடு வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து மாநாட்டு பணிகளை தொடங்குவதற்கு ஏதுவாக கால்கோல் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் , நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், பொருளாளர் கே.கே.சி.பாலு மற்றும் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், மூத்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்கு தேவையான கருத்துகளும், திட்டங்களும், தீர்மானங்களாக நிறைவேற்றப்படும் எனவும் , மாநாட்டில் 12 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் நடைபெற உள்ளதாகவும், இம் மாநாட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சேர்ந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ தெரிவித்தார்.

Tags:    

Similar News