தே.ஜ. கூட்டணிக்கு என்னை யாரும் அழைக்கவில்லை: ஓபிஎஸ்
பிரிந்துகிடக்கும் அதிமுகவினர் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் இன்றைய தலையாயக் கோரிக்கையாக உள்ளது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.;
By : King 24x7 Desk
Update: 2026-01-27 14:47 GMT
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் மதுரை மதுரை வந்தடைந்தார். அப்போது மதுரை விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “பிரிந்துகிடக்கும் அதிமுகவினர் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் இன்றைய தலையாயக் கோரிக்கையாக உள்ளது. என்னுடைய ஒற்றை கோரிக்கை வேண்டுகோள் பிரிந்திருக்கும் அதிமுக அனைத்து சக்திகளும் ஒன்றிணை வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. அதிமுகவில் மீண்டும் இணைவது ஆண்டவன் கையில் உள்ளது. தே.ஜ. கூட்டணிக்கு டிடிவி உள்பட யாரும் என்னை இதுவரை அழைக்கவில்லை” என்றார்.