பிரதமர் மோடியை தொடர்ந்து அமித்ஷா தமிழகம் வருகை: சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்!!

2 நாட்கள் பயணமாக பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா வரும் 28ம் தேதி தமிழகம் வர உள்ளார்.;

Update: 2026-01-25 05:50 GMT

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக (அன்புமணி தரப்பு), அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனிடையே, கடந்த 23ம் தேதி மதுராந்தகத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில், 2 நாட்கள் பயணமாக பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா வரும் 28ம் தேதி தமிழகம் வர உள்ளார். அவர் பாஜக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். பிரதமர் மோடியை தொடர்ந்து அமித்ஷாவின் வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Similar News