ராகி ஸ்டீம்டு சோமாஸ் !

Update: 2024-05-15 11:48 GMT

ராகி ஸ்டீம்டு சோமாஸ்

தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 2 கப்

வெல்லம் அல்லது கருப்பட்டி - 1 கப்

தேங்காய் துருவல் - 1 மூடி

ஏலக்காய் தூள் - சிறிது

பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழம் - 1/2 ௫

உப்பு - 1 சிட்டிகை

நெய் அல்லது நல்லெண்ணெய் - சிறிது

செய்முறை:

ராகி மாவை இளம் சூடாக வறுத்துக் கொள்ளவும்.

வெல்லம் அல்லது கருப்பட்டியில் ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, நெய், உப்பு சேர்த்து, ராகி மாவுடன் சேர்த்து பிசைந்து வைக்கவும்.

தேங்காய் துருவலுடன் பேரீச்சம்பழம், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

பிசைந்து வைத்துள்ள ராகி மாவை சின்னச் சின்ன பூரியாக இட்டு, உள்ளே பூரணத்தை ஸ்டஃப் செய்து, மடித்து, சோமாஸ் கட்டரில் வெட்டி, இட்லி பாத்திரத்தில் துணி போட்டு, வேக வைக்கவும். ஸ்டீம்டு சோமாஸ் ரெடி!

Tags:    

Similar News