ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் நடுவர்களுக்கான தேர்வு

தமிழ்நாடு மாநில ஹாக்கி சங்கம் சார்பில் நடுவர்களுக்கான தேர்வு விருதுநகரில் நடைபெற்றது.

Update: 2024-06-03 09:16 GMT

வரும் ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்த பின்பு தமிழகத்தில் நடுவர்களுக்கான லெவல் 2 தீர்வு நடைபெற இருப்பதாகவும் அதிக அளவிலான வாய்ப்பு தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் வீரர்களை உருவாக்குவதை விட நடுவர்களையும் உருவாக்க வேண்டும் என நோக்கத்தில் இந்த நடுவர் தேர்வு நடைபெற்றதாகவும் விருதுநகரில் ஹாக்கி இந்தியாவின் பொருளாளர் சேகர் ஜே மனோகரன் பேட்டி....


தமிழ்நாடு மாநில ஹாக்கி சங்கம் விருதுநகர் ஹாக்கி கூட்டமைப்பு மற்றும் கே வி எஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து விருதுநகர் கே வி எஸ் மேல்நிலைப் பள்ளியில் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் நடுவர்களுக்கான தேர்வு நடைபெற்றது மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த தேர்வில் முதல் நாளில் ஹாக்கி வீரர்களுக்கு சர்வதேச நடுவர் முகுல் முகமது முனீர் மற்றும் அணில்குமார் ஆகியோர் ஹாக்கி நடுவர் தேர்வாளர்களுக்கு பயிற்சி அளித்தனர். அதைத் தொடர்ந்து எழுத்து தேர்வு செய்முறை தேர்வு நடைபெற்றது இதில் 202 நபர்கள் தேர்வு பெற்ற நிலையில் ஹாக்கி இந்தியாவின் பொருளாளர் சேகர் ஜே. மனோகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்வு முடித்த பயிற்சியாளர்களுக்கு நடுவர் அட்டை வழங்கினர்.

தேர்வில் ஹாக்கியின் விதிகள், ஹாக்கி போட்டியில் எந்தெந்த சூழ்நிலைகளில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், எழுத்து தேர்வு, வாய்மொழி தேர்வு நேரடி பயிற்சி உள்ளிட்ட தலைப்பில் பயிற்சி கொடுக்கப்பட்டது. இதில் மொத்தம் 202 பேர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து கலந்து கொண்டனர். தங்குமிடம், உணவு, டீசர்ட், அடையாள அட்டை உள்ளிட்டவற்றை கே.வி.எஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி வழங்கியது.

மேலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஹாக்கி இந்தியாவின் பொருளாளர் சேகர் மனோகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஹாக்கி போட்டிக்கான நடுவர் தேர்வு நடைபெற்ற இருப்பதாகவும் தமிழகத்தைச் சார்ந்த நான்கு நபர்கள் மட்டுமே தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் நடுவர்களாக பங்கேற்ற நிலையில் தற்போது தமிழகத்தைச் சார்ந்த 44 நபர்கள் இந்திய அளவில் நடைபெறும் ஹாக்கி போட்டியில் நடுவராக பங்கேற்பதாகவும் நான்கு நபர்கள் உலக அளவிலான ஹாக்கி போட்டியில் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் நடுவர்களாக பங்கேற்று வருவதாகவும் தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேசிய அளவில் நடைபெறும் போட்டிகள் தமிழகத்தில் நடைபெற்று வருவதாகவும் அதேபோல் ஆசிய அளவிலான சாம்பியன்ஸ் போட்டியும் தமிழகத்தில் நடைபெற்று இருப்பதாகவும் இது போன்ற போட்டிகளில் நடுவர்களாக பங்கேற்க வாய்ப்புகள் இருப்பதாகவும் வரும் ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்த பின்பு தமிழகத்தில் நடுவர்களுக்கான லெவல் 2 தீர்வு நடைபெற இருப்பதாகவும் அதிக அளவிலான வாய்ப்பு தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் வீரர்களை உருவாக்குவதை விட நடுவர்களையும் உருவாக்க வேண்டும் என நோக்கத்தில் இந்த நடுவர் தேர்வு நடைபெற்றதாகவும் எக்ஸ்டென்ஸ் ஹாஸ்டல் என்ற அமைப்பு இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த ஹாக்கி அகடமியை தேர்வு செய்து ஹாக்கி இந்தியா உடன் இணைந்து அந்த அகாடமியை சேர்ந்தவர்களை மிகச் சிறந்த வீரர்களாக உருவாக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் கூறினார் 

Tags:    

Similar News