பெண் ஊராட்சி துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி

தூத்துக்குடியில் காவல்துறையினர் முன்னிலையில் பெண் ஊராட்சி துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-18 08:09 GMT

கொலை மிரட்டல் 

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி உபதலைவர் முதலமைச்சர் தனிபிரிவுக்கு அளித்த மனு "நான் தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி உபதலைவராக உள்ளேன். நான் கடந்த மாதம் 29/11/2023 அன்று புதுக்கோட்டையில் கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்ற மக்கள் களம் நிகழ்வில் எம் ஊராட்சி பொதுமக்கள் சார்பாக எம் ஊராட்சியில் 2தாக கடநத அரசால் அமைக்கப்பட்ட சேர்வைக்காரன்மடம் ஊராட்சி காமராஜர் நகர் பெண்கள் கழிப்பிடம் அருகில் உள்ளதும் பெண்கள் வேலை செய்யும் ஊராட்சி நர்சரி அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை எண் 10144 ஐ அப்புறப்படுத்த மனு அளித்தேன்.

கடந்த 4/12/2023 அன்று மேற்படி நினைவூட்டல் மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன். மேற்படி டாஸ்மாக் கடைக்கு வாடகை கட்டிடம் அளித்தும் அதன் அருகில் குடியிருந்து வரும் காவல்துறை HS RECORD கொண்ட ரவுடி ரஸ்னா மாரியப்பன் என்பவர் என் மீது 6/12/2023 அன்று மாவட்ட காவல் கண்பாணிப்பாளர் அவர்களிடம் 4/12/2023 திங்கள் தின கோரிக்கை அன்று மாவடட ஆட்சியர் அலுவலகத்தில் நான் மாரியப்பனை மிரட்டியதாகவும் கெட்டவார்த்தை கூறி ஏசியதாக பொய் புகார் அளித்துள்ளார். மற்றும் பேரிடர் மழைகாலத்தில் காமராஜர் நகர் மக்களை பார்வையிட ஊராட்சி உபதலைவராக என் பணியை செய்யப்பெற்ற போது சென்றபோது ரஞ்சித் என்பவர் 24/12/2023அன்று அவரை ஜாதியை பற்றி பேசியதாக பொய் புகார் காவல் நிலையத்தில் அளித்தார்.

நான் விசாரணைக்கு 26/12/2023 சாயர்புரம் காவல் நிலையம் சென்றேன்.மேற்படி காவல் உதவி ஆய்வாளர் மம்முது என்பவர் முறையாக விசாரணை செய்யாமல் என் மீது பொய் புகார் அளிக்கப்பட்ட மாரியப்பனுக்கு ஆதரவாக செயல்பட்டு என்னை இனிமேல் செய்யமாட்டேன் என எழுதி தர நிர்பந்தித்தார். நான் பெண் மக்கள் பணி செய்கிறேன் என கூறியும் நான் என் தரப்பு ஆவணங்களை அளித்தும் அதை பெற்று விசரணை நடத்தாமல் மேற்படி மாரியப்பன் என்பவர் அரசு டாஸ்மாக் கடையை வைத்து பிழைப்பு நடத்துவதாகவும் இனி நீங்கள் அவரை தொந்தரவு செய்யாதீர்கள் என மிரட்டினார்.

மேலும் நான் எந்த தவறும் செய்யவில்லை என எழுதி தான் தருவேன் என கூறினேன். அந்தநேரம் மாரியப்பன் என்பவர் வேற லெவலில் உன்னை பண்ணிவிடுவேன் என இரட்டை அர்த்தத்தில் பேசி கொலைமிரட்டல் காவல் நிலையத்தில் விடுத்தார். மேற்படி உதவி காவல் ஆய்வாளரும் கண்டுகொள்ளவேயில்லை. இருவரும் பெண்ணாகிய என்னை மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தினார்கள. மாரியப்பன்மிரட்டல் விடுத்ததை வேடிக்கை பார்த்து எனக்கு உயிர்பயத்தை ஏற்படுத்தி துன்புறுத்தி மன உளைச்சலை ஏற்படுத்திய சாயரபுரம் உதவி காவல் ஆய்வாளர் மம்மூது மீது நடவடிக்கை எடுக்கவைண்டும்.

முறையாக விசாரிக்காமல் மக்கள் பணி செய்யும் ஏழை தலைவர்கள் மக்கள் குறை கூறுவார்களே என மக்களை சந்திக்க செல்வார்கள் என என்னையும் மக்கள் பணியை இழிவுபடுத்தினார். தனித்தனியாக உள்ள இருபுகார்களை தனித்தனியாக விசாரணை செய்யாமல் மேற்படி இரண்டு நபர்களையும் உட்காரவைத்து நான் சாதியை பற்றி பேசவே இல்லை என கூறியும் ரஞ்சித் என்ற பொன்மாடசாமியை இனி பேசமாட்டார் என ஆறுதல் கூறுவது போல் கூறி உதவி காவல் ஆய்வாளர் என்னை இழிவு படுத்தினார்..தமிழ் நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச்சட்டம் 1998 படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.மேலும் அரசு டாஸ்மாக் பார் 11/12/2023 அன்று ஏலம் நடைபெற்று உள்ளது.என் மீது அளிக்கப்பட்டுள்ள புகாரில் மேற்படி ரவுடி 6ம் தேதி பார் ஏலம் எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். வீடியோ ஆதாரம் உள்ளது என மனுவில் தெரிவிக்கபட்டுள்ளது

Tags:    

Similar News