பேருந்து வசதி கேட்டு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
பேருந்து வசதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்
By : King 24x7 Website
Update: 2023-12-11 17:09 GMT
தமிழ்நாடு பெரும்பிடுகு முத்தரையர் மறுமலர்ச்சி சங்கம் சார்பில், மாவட்ட செயலாளர் மகாமுனி தலைமையில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, கொசூர் ஊராட்சியில் உள்ள ஒட்டப்பட்டி பகுதி கிராம மக்கள் உடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில், எங்கள் ஊரிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவியர்கள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் பேருந்து வசதி இல்லாமல் பெரும் துன்பம் அடைந்து வருவதாகவும், குறித்த நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு க்கு சென்று வர மிக சிரமமாக உள்ளது எனவும், அவர்கள் ஊரில் இருந்து கரூர்- கொசூர், பொசியம்பட்டி வழியாக இரண்டு பேருந்துகள் ஏற்கனவே வந்ததை கொரோனா காலத்தில் நிறுத்தி உள்ளதாகவும், அதனை மீண்டும் இயக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின் போது, இந்த அமைப்பைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் கனகராஜ், மாவட்ட துணை செயலாளர் ராஜலிங்கம் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.