செஞ்சியில் விஸ்வகர்மா பேரவை பொதுக்குழு கூட்டம்.
நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Update: 2023-12-18 06:34 GMT
அகில இந்திய விஸ்வகர்மா பேரவையின் தேசிய பொதுக்குழு கூட் டம் செஞ்சியில் நடைபெற்றது. இதற்கு தேசிய தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஜெகதீசன், கவுரவ தலை வர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொள்கை பரப்பு செயலாளர் பாஸ்கர் வரவேற்றார். புதுச்சேரி மாநில பொதுச்செய லாளர் சுகுமார் அமைப்பின் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சி யில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் விஸ்வகர்மா சமூகத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்திட வைக்கப்பட் டுள்ள கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், பாரம்பரிய நகை தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத ஜூலை, செப்டம் பர், டிசம்பர் மாதங்களில் குடும்ப நிவாரண உதவித்தொகை ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும், வங்கியில் நகை மதிப்பீட்டார்களாக உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், நிர்வாகிகள் நேரு, பன்டாரி, சண்முகம், மாணிக்கவாசகம், மணிகண்டன், கதிர்வேலு செல்வம், குபேரன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் குமரவேல் நன்றி கூறினார்.