பெரம்பலூர்: ரூ.46.70 லட்சம் மோசடி - கில்லாடி பெண்
பெரம்பலூரில் இடத்தை விற்பதாக கூறி ரூ.46.70 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தொண்டபாடியை சேர்ந்த வர் சின்னதுரை. இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டபாடி கிளை செயலாளராக இருந்து வருகிறார். சின்னதுரையின் மனைவி சாந்தி வயது 35. இவருக்கு, எசனையை சேர்ந்த அன்பழகனின் மனைவி சுஜாதா வயது - 45, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்புக்கு ழுவின் பெரம்பலூர் மாவட்ட மகளிரணி செயலாளராக உள்ளார்.
இவர் கோனே ரிபாளையத்தில் உள்ள தனது வீட்டை விற்பனை செய்யமுடிவு செய்துள்ளார். இதில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந்தேதி சுஜாதா சாந்திக்கு தனது வீட்டினை எழுதிகொடுப்பதாககூறி, ரூ.66 லட்சத்துக்கு இருதரப்பினரும் பேசி முடிவு செய்துள்ளனர். பின்னர் சாந்தியிடம் இருந்து சுஜாதா ரூ.46 லட்சத்து 70 ஆயிரத்தை முன்பணமாக பெற் றுள்ளார். அதனை தொடர்ந்து சுஜாதா, சாந்திக்கு வீட்டினை எழுதிக் கொடுக்காமலும், வாங்கிய பணத்தினை திருப்பி கொடுக்காமலும் இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில் சுஜாதா, சாந்தியிடம் இருந்து கூடுதலாக ரூ. 14 லட்சம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் சாந்தி தன்னிடம் வீடு விற்பனை செய்வதற்கு பேச்சுவார்த்தை நடத்திய சுஜாதா மற்றும் சுஜா தாவின் குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் சுஜாதா, அவரது கணவர் அன்பழகன், மகன்கள் அபிமன்யு, ரேஸ்மணி, அன்பழகனின் அண்ணன் தமிழரசு, தமிழரசுவின் மனைவி கவிதா ஆகிய 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சுஜாதாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்து இரு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.