கே வி குப்பத்தில் 12-ஆம் தேதி உங்கள் ஊரில் உங்கள் திட்டம்

கேவி குப்பத்தில் உள்ள மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக வருகிற 12-ம் தேதி அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-09 15:52 GMT

மாவட்ட ஆட்சியர்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டு அறிந்து அரசின் அனைத்து நலத்தங்களும் சேவைகளும் தங்கு தடை இன்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

  முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் செயல்படுத்த வருடாந்திர அட்டவணைப்படி கே வி குப்பம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் வருகிற 12-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற

உள்ளது. ஆகவே சிறப்பான திட்டத்தில் பொதுமக்கள் 12ம் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை கே வி குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News