பரபரப்பாக நடந்த ஏரி நீர் பாசன தலைவர் தேர்தல்

Update: 2024-10-01 12:27 GMT

பரபரப்பாக நடந்த ஏரி நீர் பாசன தலைவர் தேர்தல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

உத்திரமேரூர் அருகே சட்டமன்றத் தேர்தலை மிஞ்சும் வகையில் பரபரப்பாக நடைபெற்ற ஏரி நீர் பாசன தலைவர் தேர்தல். வெற்றி பெற்ற வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.




 


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட விச்சூர் மற்றும் அரும்புலியூர் கிராம ஏரி நீர் பயன்படுத்துவதற்கான சங்க தேர்தல் இன்று அரசு தொடக்கப் பள்ளிகளில், வாக்குப்பதிவு அலுவலர்கள் ராகவி, உமா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில், நிலம் வைத்துள்ள வாக்காளர் ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்து ஒவ்வொருவராக உள்ளே சென்று அவர்களுடைய ஓட்டினை ஓட்டு பெட்டகத்தில் போட்டு பதிவு செய்தனர்.

விச்சூர் ஏரி நீர் பாசன தலைவர் வேட்பாளர்களாக விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த டில்லி என்பவர் வில் அம்பு சின்னத்திலும், திமுகவை சேர்ந்த முருகேசன் என்பவர் பல்பு சின்னத்திலும் போட்டியிட்ட நிலையில், முருகேசன் 38 ஓட்டும், டில்லி 53 ஓட்டும், செல்லாத ஓட்டு 3 பதிவு ஆகிய நிலையில் 15 ஓட்டுகள் வித்தியாசத்தில் விசிக வை சேர்ந்த டில்லி வெற்றி பெற்றார்.

அதேபோல், அரும்புலியூர் ஏரி நீர் பாசன தலைவர் வேட்பாளர்களாக , திமுகவை சேர்ந்தவர்களான முத்து வில் அம்பு சின்னத்திலும், ரவிந்திரன் பல்பு சின்னத்திலும் போட்டியிட்டனர்.

இதில், ரவீந்திரன் 101 ஓட்டுகளும், முத்து 148 ஓட்டுகளும், செல்லாத ஓட்டுகள் 5 பதிவாகிய நிலையில், முத்து 47 போட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதைத்தொடர்ந்து, வெற்றி பெற்ற டில்லி மற்றும் முத்து ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும் சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஏரி நீர் பாசன தேர்தலை முன்னிட்டு சாலவாக்கம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News