முத்துராமலிங்கத் தேவரின் உருவ படத்திற்கு விஜய் மரியாதை!!
பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உருவ படத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.;
By : King 24x7 Desk
Update: 2025-10-30 13:20 GMT
இதுதொடர்பாக விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன் என்று கூறியுள்ளார்.