தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!!

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.;

Update: 2025-11-05 08:38 GMT

vijay

த.வெ.க.வின் அடுத்த கட்ட நடவடிக்கை, சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். முதலாவதாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அக்கட்சியின் கொள்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து 12 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கியமாக 2026 தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு அதிகாரம் வழங்கியும், முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜய்யை அறிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தவெகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என அதிமுக, பாஜக கட்சிகள் தொடர் முயற்சி எடுத்து வந்த நிலையில், அந்த அழைப்பை தற்போது தவெக நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தவெகவில் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

1.கரூரில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல்

2.பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்

3.தமிழகம், புதுவை சேர்ந்த 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் மற்றும் அவர்களின் விடுதலைக்கு அறிவுறுத்தல்

4.வாக்குரிமை பறிக்கும் S.I.R-க்கு கண்டனம்

5.டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாதிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு கண்டனம்

6.வடகிழக்கு பருவமழைக்கு போதிய ஏற்பாடுகளை அரசு செய்து முடிக்க வேண்டும்

7.ராம் சார் சதுப்புநிலத்தில் கட்டுமான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்

8.தலைவரின் மக்கள் சந்திப்புக்கு வரும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை இந்த அரசு வழங்க வேண்டும்

9.கழகத்தின் மேலும் கழகத் தோழர்களின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் அவதூறு பரப்பும் அரசின் கைக்கூலிகளுக்கு கண்டனம்

10.தமிழக தொழில்துறைக்கு வந்த முதலீடுகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

11. ஜனநாயகத்துக்கு எதிராக கருத்துரிமையையும் பேச்சுரிமையையும் சிதைக்கும் வகையில் கைது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசுக்கு கண்டனம்

12. கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. மக்கள் விரும்பும் முதல்வர் தளபதி விஜயின் தலைமையிலேயே போட்டி

Similar News