நல்லாட்சியா இருந்திருந்தா செய்திருப்பாங்க... 40 ரூபாய் கமிஷன் கேட்குறாங்க: நயினார் நாகேந்திரன்

இரண்டாவது கட்ட சுற்றுப்பயணம் இன்று மாலை பெரம்பலூரிலும்ம் அதனை தொடர்ந்து அரியலூரிலும் நடைபெற உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-10-25 08:20 GMT

nainar nagendran

மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இரண்டாவது கட்ட சுற்றுப்பயணம் இன்று மாலை பெரம்பலூரிலும் அதனை தொடர்ந்து அரியலூரில் நடைபெற உள்ளது. அதில் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சியின் குறைபாடுகளை சுட்டிக் காட்டி உரையாற்ற உள்ளேன். தஞ்சாவூரில் சேதமடைந்துள்ள நெல் மூட்டைகளை பார்த்துவிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறவும் திட்டமிடப்பட்டுள்ளது. 17 சதவிகிதமாக இருக்கும் நெல்லின் கொள்முதல் ஈரப்பதம் 22 சதவிகிதமாக உயர்த்தி கொள்முதல் செய்வதற்கான ஆய்வுக் குழுவை மத்திய அரசு அனுப்பி உள்ளது. அதை பரிந்துரை செல்லவும் இன்றும் நாளையும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் சென்று கொண்டிருக்கிறேன். தமிழக ஆட்சி தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நல்ல ஆட்சியாக இருந்திருந்தால் உடனடியாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி இருக்க வேண்டும். கொள்முதல் செய்வது தாமதமாகிறது. அதில் 40 ரூபாய் கமிஷன் கேட்கிறார்கள் என்ற தகவலும் இருக்கிறது. நெல் கொள்முதலை தமிழக அரசு முறையாக கையாளவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு. தென் மாவட்டங்களில் நடைபெறும் கனிம வளகொல்லையில் ஆளும் கட்சியின் முக்கிய பெரும்புள்ளிகளுக்கு பங்கு உள்ளது என அன்புமணி கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே ஆளும் கட்சியினர் தான் அனைத்து கல்குவாரிகளிலும் ஒரு லாரிக்கு குறிப்பிட்ட தொகை என மாவட்ட செயலாளர் மாவட்ட அமைச்சர்கள் பெற்று கொண்டு இந்த செயலில் ஈடுபடுவதாக தகவல்கள் உள்ளது. அதிகாரிகளை மதிக்காத கூட்டணி தான் திமுக கூட்டணி” என்றார்.

Similar News