தமிழக அரசுக்கு அதிமுகவின் 5 கேள்விகள்!!

தமிழக அரசுக்கு அதிமுக 5 கேள்விகளை எழுப்பியுள்ளது.;

Update: 2025-10-11 06:27 GMT

EPS

அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியான பதிவில், ‘திமுக அரசுக்கு 5 கேள்விகள்: 21 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உயிரிழக்க காரணமான ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தின் லைசன்ஸ் திரும்பப் பெறப்படுவதாக திமுக அரசு அறிவித்த பிறகு எடுத்த நடவடிக்கைகள் என்ன? மருத்துவத் துறை சார்பில் சுற்றறிக்கை, அல்லது அரசாணை ஏதேனும் வெளியிடப் பட்டதா?. ஏற்கனவே மருந்து கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட மருந்துகள் விற்பனைக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டீர்களா? தமிழகம் முழுவதும் உள்ள மருந்து கடைகளில் இருந்து ஸ்ரீசன் நிறுவன மருந்துகள் முழுமையாக அகற்றப்பட்டதை உறுதி செய்ததா திமுக அரசு? முதல்வருக்கு ப்ரோமோஷன் செய்ய அவ்வப்போது விளம்பரம் கொடுக்கிறீர்களே... 21 அப்பாவி குழந்தைகள் உயிரிழக்க காரணமான இந்த நிறுவன மருந்துகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவது குறித்து செய்தித் தாள்களில், ஊடகங்களில் ஏதேனும் விளம்பரம் வெளியிட்டீர்களா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளது. 

Similar News